நெருக்கடியில் ஓர் எதிர்நீச்சல்

எந்த ஒரு நெருக்கடியை சந்திக்கும் பொழுதும், அதிலிருந்து எப்படி மீண்டு எழுவது (survive செய்வது) என்பதே நம் முதல் கட்ட சிந்தனையாக இருக்கும்.

இந்நிலையில் ஒரு தொழில்முனைவோர் தன் மனதளவில் கடவுள்போல இருக்க முயற்சிக்க கூடாது – don’t play god (எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை) அதே சமயத்தில் தன்னை தாமே பலியாடு என்று எண்ண கூடாது – don’t play victim (தன்னிரக்கம் கூடாது).

இந்தச் சூழ்நிலையில் பீதியைக்/பதற்றத்தை கட்டுப்படுத்த நிலைமைகுறித்த விழிப்புணர்வும்(Awareness of the Situation), நிறுவனம் சார்ந்தவர்களுடனும் (உள் மற்றும் வெளிப்புற) தெளிவான தகவல்தொடர்புகளும் (communication) மிக முக்கியம்.

இன்றைய நிலைமையை ஒரு சிறிய எடுத்துக்காட்டைக் கொண்டு புரிந்துகொள்ள முயல்வோம். இந்த lockdown சமயத்தில் ஒரு குடும்பம் ஒரு car-ல் பயணம் செய்து கொண்டு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த car எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது அந்தக் carல் உள்ள petrolன் அளவு, mileage efficiency மற்றும் அடுத்த petrol bunk-ன் தூரத்தைச் சார்ந்தே உள்ளது.

இப்பொழுது அந்த car தான் உங்களுடைய business. பயணிகள் உங்களுடைய employees. petrol அளவு தான் உங்கள் business-ல் உள்ள பண இருப்பு (cash balance), mileage efficiency உங்கள் business-ன் செலவுகளையும் மற்றும் அடுத்த petrol bunkன் தூரம் என்பது cash flow இயல்பு நிலைக்கு வரத் தேவைப்படும் கால அவகாசத்தையும் குறிக்கும். எனவே car (business) மற்றும் பயணிகளின் (employees) பாதுகாப்பை கருதி, driver (business owner) பதட்டமடையாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அவ்வாறு பதட்டமின்றி, மேற்படி சொன்ன அனைத்து factorsஐயும் நினைவில் கொண்டு முடிவுகளை எடுப்பதில்தான் இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வரும் வாய்ப்புகள் முற்றிலும் சார்ந்துள்ளது.   

இந்த blog-ன் மூலமாக நாங்கள் கூறும் விஷயங்கள் முற்றிலும் புதிதாக இல்லை எனினும், உங்களின் தெளிந்த சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஊன்றுகோலாக இருக்கக்கூடும் என நம்புகிறோம்.

Awareness of the situation

நிதி நிலைமையும் HR முடிவுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை ஆகும். ஆயினும், நெருக்கடியான சூழல் ஏற்படுகையில் ஒரு தொழிலதிபர் எவ்வளவுதான் stakeholdersன் நலனைப் பாதுகாக்க பாடுபட்டாலும் சில தவிர்க்க முடியாத தியாகங்களைச் செய்தாக நேரிடும்.

தற்போதுள்ள நிலையில், ஒரு தொழிலதிபர் குறைந்தபட்சம் அடுத்த இரண்டு மாதத்திற்க்கான cash flow பற்றித் திட்டமிட பரிந்துரை செய்கிறோம். ஒரு cash flow plan-ஐ உருவாக்க அடிப்படையான செயல்கள் என்னவென்றால் – செலவுகளை (expenses) தெளிவாக ஆராய்வது மற்றும் பண இருப்பு, வரவு (cash position) பற்றிய விவரங்களை அறிவது.

செலவுகளை (expenses) ஆராய்வது

  • உங்களின் மாதாந்திர செலவுகளைப் பட்டியலிடவும்.
  • அவற்றில் தற்போதைய நிலைமையில் எந்தச் செலவு அவசியம், எது அனாவசியம் என்று பிரிக்கவும்.
  • எவருடன் பேசினால், payment செய்ய சற்று அவகாசம் கிடைக்கும் அல்லது payment தொகையில் தள்ளுபடி கிடைக்கும் என அடையாளம் காணவும்.
  • இவ்வாறு செய்தப் பிறகு, பண நிலையை (cash position) கருத்தில் கொண்டு, payments-ஐ தக்க முறையில் கையாளவும்.

சில முக்கிய செலவுகளை விவரமாகக் காண்போம்:

  • சம்பளம் (salaries and wages)

இச்செலவு மாதாந்திர செலவுகளில் ஒரு முக்கியமான பெரிய பங்காக விளங்குகிறது. EPFOக்கு அரசாங்கத்தின் பங்களிப்பை குறிப்பிட்ட சிறிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் [1]. சம்பளத்தை பொறுத்த வரையில், பெரிய MNC-யில் இருந்து start-up வரை அனைத்து ரகமான நிறுவனங்களிடமிருந்தும் கையாளும் முறைகளை கற்றுக்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு,

  1. உயர் நிர்வாகிகள் சம்பளத்தை கைவிடுவர் அல்லது குறைத்து பெறுவர்
  2. மேற்படி வேலைக்கு ஆட்கள் எடுப்பதை stop செய்வர்
  3. Year-end bonus மற்றும் yearly increments ரத்து செய்வர்
  4. சம்பளத்தில் ஒரு பங்கைத் தற்போது கொடுத்து மீதியை தாமதமாகக் கொடுக்க முயல்வர்
  5. சில start-ups அவர்களின் employees இடம் அவரவர் வசதிக்கேற்ப சம்பள குறைவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வர் [2].

மேலும், நிறுவனத்தின் தலைவரின் இந்த முடிவின் அடிப்படையில் தான் தொழிலாளிகளின் வாழ்வியல் அடங்கி இருக்கிறது என்றும், இம்மாதிரி சூழ்நிலையில் அவர்கள் தொழிலாளிகளை எவ்வாறு நடத்துகிறார் என்பது அவர்களைப் பற்றின எண்ணத்தை வெளிப்படுத்தும் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தச் சூழ்நிலையை இப்படியும் கையாளலாம்- உங்களிடம் உள்ள அனைத்து facts மற்றும் optionகளை முன்வைத்து, சம்பளத்தை பற்றின முடிவுகளை எடுக்கும் பணியில் தொழிலாளர்களை ஈடுபட செய்யலாம்.

  • வாடகை (rent)

சம்பளத்தை போல வாடகையும் ஒரு பெரிய செலவாக இருக்ககூடும். எனவே, சம்பளத்தை கையாள மேற்கண்ட options (full payment, deferred(ஒத்திவைப்பு) payment or part payment) அனைத்தும் வாடகைக்கும் பொருந்தும். இந்த காலகட்டத்தில் உபயோக படுத்தாத கடைகள் மற்றும் godown-க்கு செலுத்தும் வாடகையில் சலுகை ஏதேனும் தருமாறு கேட்டுப்பார்க்கலாம்[3]&[4].

  • Repayment of loans

இச்சூழலில் தொழில் முனைவோருக்கு உதவ Reserve Bank, loan EMI மீதான Moratorium கொண்டு வந்திருக்கிறது. இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொண்டாலும், இது loan பணம் செலுத்துவதை ஒத்தி வைப்பது மட்டுமே தவிர முற்றிலும் ரத்து செய்யவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், outstanding loanக்கான வட்டி தொகை பெருகும். Credit cardன் interest rate சற்று அதிகமாகவே இருக்கக்கூடும், எனவே பணப்புழக்கத்தில் எதுவும் சிரமம் இல்லை என்றால் Credit card billஐ நேரத்திற்கு செலுத்துவது நல்லது[5].

  • Supplier payments

இது ஒரு அளவிற்கு எளிதாக ஒத்திவைக்கக்கூடிய செலவாக இருக்க கூடும். எனினும், ஒரு பகுதி தொகையைச் செலுத்துவதன் மூலம், அவர்களது பாரமும் சற்று குறையும் மற்றும் business relationship நன்றாக இருப்பதற்கு சிறந்த செயலாக இருக்கும். எந்த dealers or suppliers உடன் பேசினால், payment செய்ய சற்று அவகாசம் கிடைக்கும் அல்லது payment தொகையில் தள்ளுபடி கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.

  • Electricity

மின்சாரக் கட்டணம், முக்கியமாக உற்பத்தியாளர்களுக்கு, ஒரு பெரிய தொகையாக இருக்கலாம். இதுவரையில் அரசு தரபில் எந்த வகையான சலுகையும் அறிவிக்கப்படவில்லை. முந்தைய மாத bill-ஐ அடிப்படையாக கொண்டு பணம் செலுத்துமாறு அறிவிக்க பட்டிருக்கிறது. எனவே இதற்கு ஏற்ப பணத்திட்டத்தை வகுக்க வேண்டும். 

  • Insurance

Stockன் மதிப்பு மற்றும் அதனுடைய risk-ஐ அடிப்படையாகக் கொண்டு insurance-ஐ renew செய்யலாம் அல்லது ஒத்திவைக்கலாம். இந்நேரத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் அத்தியாவசிய வணிகங்கள் பாதுகாப்பிற்காக புதிய insurance policiesஐ எடுத்து கொள்ளலாம் (Read: BharatPe – ICICI Lombard[6]Reliance[7]). சில insurance policies-ன் premium செலுத்தும் தேதியை அரசாங்கம் நிதானப்படுத்தியுள்ளது (Read: Premium due dates [8]).       

பணப்புழக்கம் (cash flow) மிகவும் முக்கியமான பகுதியை வகிக்கும் இந்த சமயத்தில், அனைத்து தேவையற்ற செலவுகளையும் (example – marketing expenses, புது மூலதன (capital) செலவுகள், expansion of business, etc.,) தீவிரமாக குறைத்துக்கொள்வது சிறந்த செய்கையாகும். சில பெரிய நிறுவனங்கள், புத்துணர்ச்சி செலவுகளையும் (tea, coffee மற்றும் தின்பண்டங்கள்) குறைத்துள்ளனர்.

பண நிலை (cash position)

அடுத்ததாக உங்களது பண இருப்பின் நிலையை அறிய வேண்டும். அதற்க்கு கீழ்வருபவற்றை பற்றிய விவரங்கள் அவசியமாகும்:

  • bank balance (வங்கி இருப்பு)
  • எளிதில் பணமாக மாற்றக்கூடிய assets-ன் இருப்பு (example – bankல் வைத்திருக்கும் deposits, gold, bonds etc.,)
  • Bank-ல் உள்ள overdraft அல்லது cash credit வசதிகள்
  • நமக்கு பணம் கொடுக்க வேண்டிய parties, இந்நிலையில் அவர்கள் ஏற்கனவே paymentsஐ நிறுத்தி இருக்க வாய்ப்புகள் உண்டு. இருப்பினும், அவர்களிடம் தொடர்புகொண்டு கூடுமானவரை பணம் வசூலிக்க முயல வேண்டும். அதே சமயத்தில், அவர்களிடம் நல்லுறவை தொடர வேண்டும். அவர்கள் செலுத்த வேண்டிய தொகையில் தள்ளுபடி அல்லது பாதி தொகை செலுத்த அனுமதித்தல் ஆகியவற்றை மேற்கொள்வது உங்கள் பணயிருப்பை அதிகரிக்க உதவும்.
  • Inventory – தற்போதய சூழலில் stock-ஐ clear செய்து உடனடி பணம் பெறுவது (liquidation of stock) கடினம் எனினும் அந்த முயற்சியை மேற்கொண்டு பார்க்கலாம்.

Small scale உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், “short – term செலவுகளை தாங்கிக் கொள்வது கூட பிரச்சனையாக இருக்காது ஆனால் இதுவரை வரவேண்டிய பணத்தை வசூலிப்பதில்தான் சிரமம் இருக்கக்கூடும்” என்றார்.

இந்த நெருக்கடியான கட்டத்தில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், தொழிலதிபரின் கவனம் தற்காலத்தை (short-term) நோக்கியவண்ணம் இருக்க வேண்டும் அதே சமயத்தில், நீண்ட காலம் (long-term) தாக்கத்தை (impact) நினைவில் கொள்வதும் அவசியம் தான். இதை சொல்வது எளிது ஆனால் செய்வது கடினம் என்பது நிதர்சனமான உண்மையாகும்.  

பண நிலை மற்றும் செலவு பற்றிய திட்டங்களை உருவாக்குவதோடு மட்டும் ஒரு தொழிலதிபர் -ன் வேலை முடியவில்லை. தற்போதைய நிலை மற்றும் முடிவுகளை business-ஐ சார்ந்த அனைவரிடமும் தெளிவாக communicate செய்வது ஒரு முக்கியமான காரியமாகும்.

Communication

தகவலை மற்றவருடன் பகிர்வதற்கு முன், அந்த நிறுவனத்தின் தலைவர் முதலில் சிந்தனை தெளிவு இருக்க வேண்டும். நிறுவனத்தின் மீதுள்ள நம்பிக்கையை தக்கவைக்க, அந்நிறுவனத்தை சார்ந்த அனைவருக்கும் (employees உட்பட) தக்க விஷயங்களை தெளிவாக communicate செய்வது அவசியமாகும். 

செலவுகளை குறித்த முடிவுகளை எடுத்தபின்னர், அதனை சம்மந்தப்பட்ட நபருக்கு (Stakeholders மற்றும் employees) முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு payment செய்வதில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில், முன்னதாகவே தெரியப்படுத்தினால் அவர்களின் செலவுகளை கவனித்துக் கொள்ளதக்க மாற்று ஏற்படுகளை மேற்கொள்வர்.

ஒரு நிறுவனம் நெருக்கடியைச் சமாளித்து (survive) மீண்டு எழுந்ததும், அதன் existenceஐ உறுதிப்படுத்தவும் (stabilize), மேலும் நிலைநாட்டவும் (sustain) தக்க நேரம் வரும். 

சோதனைகளை கடந்து வந்து சாதனைகள் ஆக்குவது தொழில் முனைவோருக்கு புதிதல்ல. இதையும் புன்சிரிப்புடன் மேற்கொண்டு நம் மைல்கல்லை நிலைநாட்டும் நாள் தொலைவில் இல்லை என்பதை நினைவில் கொள்வோம்.

இதுவும் கடந்து போகும்! 

[1] https://www.businesstoday.in/current/economy-politics/relief-for-employers-govt-to-bear-epfo-contribution/story/399304.html

[2]https://www.inc.com/justin-bariso/instead-of-laying-off-20-of-his-company-this-ceo-made-an-unusual-decision-its-a-lesson-in-emotional-intelligence.html

[3] https://www.businesstoday.in/latest/trends/coronavirus-tata-starbucks-asks-outlet-landlords-for-3-month-rent-waiver/story/400351.html

[4] https://economictimes.indiatimes.com/industry/services/retail/lockdown-effect-restaurants-cinemas-retailers-at-malls-seek-zero-rentals-till-may/articleshow/74956239.cms?from=mdr

[5] https://www.moneycontrol.com/news/business/personal-finance/rbi-moratorium-avoid-postponing-credit-card-dues-and-escape-exorbitant-interest-costs-5103691.html

[6] https://www.livemint.com/money/personal-finance/shopkeepers-can-buy-covid-19-cover-from-bharatpe-11585561333611.html

[7] https://www.livemint.com/money/personal-finance/reliance-general-insurance-launches-covid-19-protection-insurance-cover-11586333920929.html

[8] https://www.livemint.com/news/india/covid-19-premium-pay-for-health-third-party-auto-insurance-policyholders-eased-11585808454229.html

More Posts

Half-Yearly Report on MSME Prerana

𝐇𝐚𝐥𝐟-𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐫𝐞𝐩𝐨𝐫𝐭 𝐨𝐧 𝐌𝐒𝐌𝐄 𝐏𝐫𝐞𝐫𝐚𝐧𝐚 As of March 2021, MSME Prerana crossed 6 months into its journey since its launch in October 2020. We have

Vaccine Awareness Campaign

𝐕𝐚𝐜𝐜𝐢𝐧𝐞 𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐂𝐚𝐦𝐩𝐚𝐢𝐠𝐧 Vaccine awareness presentation developed by Poornatha Partnering Entrepreneurs Pvt. Ltd. We are sharing this with wider audience to serve a special purpose. Vaccination

Social Links

© Copyright 2023 Reserved