இந்திய மொழிகளில்
வியாபார வழிகாட்டல் திட்டம்

விருப்பமான மொழிகளில் கிளிக் செய்க

திட்ட பயன்கள்

உங்கள் எண்களைக் கையாளுதல்

மேலும் அறிய
இருப்புநிலை அறிக்கை, விகிதங்கள், வருமான அறிக்கை, பணப் புழக்கம், தொழிற்பாட்டு மூலதன மேலாண்மை, பெறத்தக்கவை மற்றும் இருப்பு மேலாண்மை ஆகியவற்றைப் புரிந்து கொள்ளுதல்.

முடிவெடுக்கும் திறன்

மேலும் அறிய
முறையாக முடிவெடுக்கும் திறன், பங்குதாரர் சீரமைப்பு மற்றும் தகவல் தொடர்பு.

நெருக்கடி நிலை மற்றும் மாற்றங்கள் மேலாண்மை

மேலும் அறிய
மாற்றத்தை ஏற்றுக் கொள்வதன் முக்கியத்துவம், மாற்றத்தின் படி நிலைகள் மற்றும் நெருக்கடி நேர தலைமைப்பண்பைப் புரிந்து கொள்ளுதல்.

மக்கள் மேலாண்மை

மேலும் அறிய
மக்களை மதிப்பிடக் கற்றுக் கொள்ளுதல் மற்றும் மக்களைக் கையாள்வதற்கு GATE கட்டமைப்பைக் கற்றுக் கொள்ளுதல்.

இடர் (Risk) மேலாண்மை மற்றும் செயல்முறை (Process) மேம்பாடு

மேலும் அறிய
இடர் (risk) மேலாண்மைக் கட்டமைப்பு, தொடர்ச்சியான மேம்பாட்டு கட்டமைப்பு (SET A, SET B) மற்றும் பிரதிபலிப்பு கற்றல் நுட்பம் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு, செயல்படுதல்

வியாபாரம் செய்வது மற்றும் கடன் பெறுவதை எளிதாக்குதல்

மேலும் அறிய
MSME பதிவு செய்முறை, வங்கி இயங்குதளங்கள், குறை தீர்த்தல், வங்கி விவகாரங்களில் சரிவர சட்டப்படி செயல்படுதல், கடன் வசதிகள் மற்றும் மதிப்பீட்டின் முக்கியத்துவம் ஆகியவற்றை புரிந்து கொள்ளுதல் .

MSME Prerana என்பது, 1500 தொழில்முனைவோர்களை இந்திய மொழிகளில் சென்றடைவதற்காக, இந்தியன் வங்கியுடன் இணைந்து செயல்படுத்தப்படுகின்ற ஒரு இலட்சியத் திட்டமாகும். இது, கவனத்துடன் வடிவமைக்கப்பட்டு , ஒருங்கிணைக்கப்பட்ட வியாபார வழிகாட்டல் மற்றும் தலைமைப்பண்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தை பூர்ணதாவும் Michigan Academy for Developing Entrepreneurs (MADE) இணைந்து வடிவமைத்துள்ளனர். MADE (USA), வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் தொழில்முனைவை அதிகரிப்பதற்காக, அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.

என்ன சிறப்பு?

எளிமையானது

மேலும் அறிய
“ பாடம் எளிமையாகவும் எவரும் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு , தெளிவுடன் வழங்கப்பட்டது. ”
-திரு. சிவா, சுபாலயா சில்க்ஸ்

கலந்துரையாய்வு முறை

மேலும் அறிய
“ விவாதங்களும், கலந்துரையாடல்களும் அதிக விவரங்களை அளிப்பவையாக இருந்தன. பயிற்றுவிப்பவர் உடனடியாகப் பதில்களை வழங்கியதற்காக, என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”
-திரு. பாலசுப்பிரமணியம்

பயன்பாடு சார்ந்தது

மேலும் அறிய
“ மக்களை மதிப்பீடு செய்வதற்கான மேட்ரிக்ஸ் முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்னுடைய ஊழியர்களில் 75% பேர் மஞ்சள் பிரிவில் இருப்பதை அறிந்து கொண்டேன். அவர்களைப் பச்சைப் பிரிவுக்குக் கொண்டு வருவதற்கு நான் உழைக்க வேண்டும். ”
-செல்வி. பரிமளா

இந்திய மொழிகளில்

மேலும் அறிய
“ இந்தத் திட்டம் சாமானிய மொழியில் வழங்கப்பட்டு, எளிதாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் இருந்தது ”
-திரு. பங்கஜ் குப்தா

நிறைவு சான்றிதழ்

மேலும் அறிய
“ நிறைவின் போது, பங்கேற்பாளர்களுக்கு MADE, பூர்ணதா மற்றும் இந்தியன் வங்கி இணைந்து அளிக்கும் சான்றிதழ் வழங்கப்படும் ”
Made Entrepreneur

MSME Prerana யாருக்கானது?

இந்தத் திட்டம், சீரான தொழில்முறையை வளர்த்துக்கொள்ள, வியாபார எண்களைப் புரிந்துகொள்ள முற்படும், வளர்ச்சி-சார்ந்த அணுகுமுறை கொண்ட தொழில்முனை வோர்களுக்காக உருவாக்கப்பட்டது .

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

விருப்பமுள்ள தொழில்முனைவோர்கள்click here 

 

ஊடக செய்திகள்

Click above for download Brochure