சிறு நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியுமா? (#WFH)

உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாகப் பரபரப்பாகப் பேசப்படும் வார்த்தையாக #WFH- (Work From Home) உள்ளது. COVID -19 பரவியதை அடுத்து, IT மற்றும் ITயால் செயல்படக்கூடிய நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை (Work from Home) எளிதில் பின்பற்றினர். இதை அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளும் ஊக்குவித்தாலும், வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி அனைவர்க்கும் கிடையாது என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். AIMO- (All India Manufacturers Association) – சொல்வது என்னவென்றால், வீட்டிலிருந்து செய்யப்படும் முக்கிய வேலைகள் MSME (Micro, Small and Medium Enterprises) மற்றும் சேவைத் துறையில் 8% க்கும் குறைவாகவே பொருந்தும்[1].

‘வீட்டிலிருந்து வேலை செய்யமுடியுமா?, எப்படி செய்வது?’, ‘உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும் எப்படி சாத்தியமாகும்?’ என்பதைபற்றி அறிய இந்த Blog(வலைப்பதிவு) உதவும் என்று நம்புகிறோம்.

நீங்கள் மேலும் படிக்கும் முன் : பெரும்பாலான MSME-களுக்கு, இந்தச் சோதனையான நேரத்தில் Survival-(தொழிலை நடத்துவது) மட்டுமே முக்கியமான விஷயமாக இருக்கும். அதற்கு Cashflow-பணப்புழக்கம் அவசியம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு உங்கள் Cashflow-பணப்புழக்கத்தைத் திட்டமிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். திட்டமிடும்போது சம்பளம் மற்றும் ஊதியம் (படிக்க: Govt.’s EPF Contribution[2]), மாத தவணை (படிக்க: EMI மீதான Moratorium[3]), சப்ளையர் கடன், வாடகை, காப்பீடு போன்றவற்றை மனதில் வைத்துக் கொள்ளவும்.

MSME-களில் முக்கியமான செயல்பாடுகளை வீட்டிலிருந்து செய்ய முடியாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும், சூழ்நிலையின் கட்டாயத்தால் சில MSME நிறுவனங்கள் இதைத் தழுவியுள்ளன, அவற்றில் சிலவற்றை நான் இங்கு விவரிக்க விரும்புகிறேன்.

உதாரணமாக, தேனியைச் சேர்ந்த ஒரு அரிசி உற்பத்தியாளர் தனது இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு  (Production Head, Accounts Head, HR, Executives and Data entry operators) வீட்டிலிருந்து வேலைசெய்யும் முறையை அமல்படுத்தியுலார் அமல்படுத்தியுள்ளார். இந்த நேரத்தில் அவர்களது பழைய ERPயிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட Cloud-அடிப்படையில் இயங்கும் ERPக்கு Data-வை இடம்பெயர்வும், testing-ங்கும் செய்கிறார்கள். நிறுவனத்தின் HR இந்த நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளித்து வருகிறார், மேலும் HR-Consultant உடன் ஒருங்கிணைந்து Role Clarity Document-ஐ உருவாக்குதல், KRAs (Key Result Areas), KPIs (Key Performance Indicators) மற்றும் – Performance Score Card-ஐ உருவாக்குதல் போன்ற சிறந்த HR நடைமுறைகளைச் செயல்படுத்தி வருகிறார்கள். அவர்கள் வரும் வாரங்களில் Process Documentation மற்றும் SOP(Standard Operating Procedure) -களை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.

இந்த நிறுவனத்தின் இயக்குனர் Journey in Joy -Leadership Transformation Program-இன் பழைய உறுப்பினராவர். அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கடினமாக இருந்தாலும் அவர்களின் குழு செய்யவிருக்கும் இப்பணிகள், அவர்களை முன்பைவிட மேலும் வலுவானவர்களாக மாற்ற உதவும் என்று கூறுகிறார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இந்த எடுத்துக்காட்டில் பெரும்பாலான ஊழியர்களுக்கு வேலை செய்யச் சொந்த Laptop-கள் இருந்தது, மற்றவர்களின் வீடுகளில் Desktop-கள் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

மற்றொரு சுவாரஸ்யமான எடுத்துக்காட்டு, மதுரையில் உள்ள ஒரு கட்டிடக் கலைஞரின்(Architect) நிறுவனம், வழக்கமான drawing வேலைக்கும் கூடுதலாக Google forms-ஐ பயன்படுத்தி Online survey மூலம் அவர் வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்ள ஒரு Research-ஐ தொடங்கிருக்கிறார்.

இவர்கள் சாதாரண குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோரே, அவர்களும் இந்தச் சூழலுக்குத் தள்ளப்படும் வரை ‘வீட்டிலிருந்து வேலை செய்ய முடியுமா?’ என்ற சந்தேகம் இருந்தது தான் நிதர்சனம்.

பூர்ணதாவில் நாங்களும் வீட்டிலிருந்தே எங்கள் வழக்கமான வேலைகளுக்கும் கூடுதலாக வெளி நபர்களுடன் இணைந்து புது முயற்சிகளையும் செய்துகொண்டு வருகிறோம் (அவர்களும் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்).

 • எங்கள் MADE-partner-களுடன் இணைந்து MSME வணிக மதிப்பீட்டு செயல்முறையை உருவாக்குதல் (Business Assessment Tool)
 • Knowledge sharing செய்வதற்காக இரண்டு வெவ்வேறு Tech company-களுடன் இணைந்து இணையதளங்களை உருவாக்குதல்
 • வடிவமைப்பாளர்கள் (Designer) மூலம் Course Material மற்றும் புத்தகங்களை வடிவமைத்தல்
 • செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் SOP-களை உருவாக்குதல், எங்கள் பல்வேறு நடவடிக்கைகளுக்கானChecklist- களை தயாரித்தல்

போன்ற வேலைகளைச் செய்து வருகிறோம்

பெரும்பாலான MSME-களுக்கு, தொலைதூரத்திலிருந்து வேலை செய்யச் சில IT infrastructure மேம்பாடு மற்றும் மறுசீரமைப்பு தேவைப்படும். தொழில்முனைவோர் தகவல்தொடர்பு சிக்கல்கள், தரவு பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் செயல்திறன் வீழ்ச்சி போன்றவற்றால் கவலைப்படுகிறார்கள்.

MSME தலைவர்களும் அவர்களது குழுக்களும் வீட்டிலிருந்து செய்ய முயற்சிக்கலாம் என்று நாங்கள் நினைக்கும் சில வேலைகள் :

 1. நீங்கள் பல நாட்களாகப் போட வேண்டும் என்று நினைத்த Business Plan-ஐ இப்போது போடலாம்.
 2. Marketing plan அல்லது ஒரு Sales plan போடலாம்.
 3. இணையத்தில் Market research செய்யலாம்.
 4. உங்கள் வணிகம் அல்லது தொழிலுக்குப் பொருந்தக்கூடிய பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் மானியங்கள்பற்றிப் படித்து அறியலாம்.
 5. உங்கள் வணிகத்திற்கு சம்பந்தப்பட்ட சட்டங்களையும், விதிகளையும் புரிந்து கொள்ளலாம்.
 6. உலகெங்கிலும் இருந்து உங்கள் துறை சம்பந்தப்பட்ட சிறந்த நடைமுறைகளைக் (global best practices)கற்றுக்கொள்ளலாம்
 7. Online Marketing கற்றுக் கொள்ளலாம் அல்லது உங்கள் வணிகத்திற்கான ஆன்லைன் presence -ஐ உருவாக்கலாம்.
 8. உங்கள் நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளுக்கு SOP -Standard Operating Procedure -களை உருவாக்கலாம்.
 9. HR செயல்முறைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கலாம்
 10. உங்கள் இணையதளத்தை உருவாக்கலாம் அல்லது புதுப்பிக்கலாம். (பெரும்பாலான Web Developers மற்றும் Content writers வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள், இதைச் செய்ய இதுவே சிறந்த நேரம்).
 11. உங்கள் Team-ற்கு வேலைகளைச் சிறப்பாக ஒதுக்கி நிர்வகிக்க, productivity app-களை செயல்படுத்த கற்றுக்கொள்ளலாம்.
 12. உங்கள் Team- உடன் தொழில் தொடர்பான கட்டுரைகளைப்(articles) படித்து Discuss செய்யலாம்.

இந்தப் பட்டியல் நீண்டதாகத் தோன்றினாலும், உங்கள் ஊழியர்களுடன் பேசியபிறகு அது மிகச் சிறியதாகத் தோன்றும் 🙂

உங்கள் Team-வுடன் call-செய்து, நீங்கள் வீட்டிலிருந்து செய்ய முடியும் என்று நினைக்கும் வேலைகளை  எடுத்துக்காட்டாகக் கூறுங்கள், ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்து ஒரு Work list- வேலை பட்டியலைத்  தயாரித்து  கொண்டு வரச் சொல்லுங்கள். அவர்கள் உங்களை ஆச்சரியப்படுத்தகூடும்.

வீட்டிலிருந்து வேலை செய்யும்பொழுது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை பற்றி இணையத்தில் போதுமான கட்டுரைகள் உள்ளன, அவைபொதுவாக இவற்றைக் கூறுகின்றன :

 • ஒரு schedule-ன்படி வேலை செய்தல்
 • தனியாக வேலைசெய்ய ஒரு நல்ல இடத்தை (முடிந்தவரை) – ஒரு நல்ல Chair, Desk மற்றும் நல்ல வெளிச்சத்துடன் இருக்குமாறு அமைத்துக்கொள்ளுதல்
 • தடையற்ற தகவல்தொடர்பை ஏற்படுத்தி அடிக்கடி வீடியோ மற்றும் தொலைபேசி அழைப்புகள்மூலம் குழுவிடம் Human Connection- னுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல்
 • குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்ப்புகளைத் தெளிவுபடுத்தல்

வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்களோ இல்லையோ, உங்கள் குழுவுடன் SMS, அழைப்புகள் மற்றும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அணியை ஒன்றாக வைத்திருக்க மிகவும் முக்கியமாகும்.

இந்த நிலைமை இயல்பானவுடன், பெரும்பாலான MSME-களுக்கு Survival-கான ஓட்டமாக இருக்கக்கூடும். இருப்பினும், தொலை தூரத்திலிருந்துசெய்யக்கூடிய பணிகளை MSME-கள் கண்டறிந்து முயற்சிப்பது முக்கியம். இது நீங்கள் பணியாளர்களைப் பார்க்கும் விதத்தை மாற்றக்கூடும். இருப்பிடம் சில வேலைகளுக்கு ஒரு தடையாக இல்லாமல் இருக்ககூடும். இந்தப் பணிகளில் சில, வேறொரு நகரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பகுதிநேர ஊழியரால் செய்யகூடியவையாக இருக்கலாம். தொலைதூரத்தில் வேலை செய்யக்கூடிய நிறுவனங்கள் பெரிய திறமைசாலிகளை ஈர்க்க முடியும், பயன்பாடு மற்றும் உபகரண (Equipment) செலவுகளைக் குறைக்க முடியும்.

ஆங்கிலத்தில் ‘when life gives you lemons make lemonade’ (lemon juice) என்பார்கள். இந்தச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி, இதிலிருந்து முன்பைவிட வலுவாக நாம் வெளிவர வேண்டும்.

# வீட்டிலிருந்து எழுதப்பட்ட பதிவு

#வீட்டில் இருங்கள் #பாதுகாப்பாக இருங்கள்

https://www.fortuneindia.com/venture/covid-19-aimo-seeks-relief-for-msmes/104321

2https://tamil.news18.com/news/business/government-to-pay-employer-and-employees-pf-contribution-for-3-months-ra-272181.html   

https://www.hindutamil.in/news/business/546513-rbi-cuts-rate.html

More Posts

Half-Yearly Report on MSME Prerana

𝐇𝐚𝐥𝐟-𝐘𝐞𝐚𝐫𝐥𝐲 𝐫𝐞𝐩𝐨𝐫𝐭 𝐨𝐧 𝐌𝐒𝐌𝐄 𝐏𝐫𝐞𝐫𝐚𝐧𝐚 As of March 2021, MSME Prerana crossed 6 months into its journey since its launch in October 2020. We have

Vaccine Awareness Campaign

𝐕𝐚𝐜𝐜𝐢𝐧𝐞 𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐂𝐚𝐦𝐩𝐚𝐢𝐠𝐧 Vaccine awareness presentation developed by Poornatha Partnering Entrepreneurs Pvt. Ltd. We are sharing this with wider audience to serve a special purpose. Vaccination

Social Links

© Copyright 2023 Reserved